வாலிபரை தாக்கி நகை பறித்த 4 பேர் கைது


வாலிபரை தாக்கி நகை பறித்த 4 பேர் கைது
x

வாலிபரை தாக்கி நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

திருமங்கலம் தென்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தன் (வயது 25). சம்பவத்தன்று, இவர் மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதை நிஷாந்தன் தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதியை சேர்ந்த முத்துவேல் (27), ஆகாஷ் (20), சிம்மக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (22), நெல்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story