வெவ்வேறு இடங்களில் நகை திருட்டு
காரியாபட்டி அருகே வெவ்வேறு இடங்களில் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வெவ்வேறு இடங்களில் நகை திருட்டு சம்பவம் நடைபெற்றது.
நகை திருட்டு
காரியாபட்டி தாலுகா சத்திரம்புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நபிஷாபேகம் (வயது 60). இவர் தனது பேரன்களை பார்ப்பதற்காக காரியாபட்டி வந்து விட்டார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் போன் செய்து நபிஷா பேகத்திடம் தங்களுடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து அவர் சத்திரம் புளியங்குளம் கிராமம் சென்று வீட்டை பார்த்த போது வீட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், வீட்டின் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகையை யாரோ திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வீட்டிற்கு வெளியே படுத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி கதவை திறந்து வைத்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மபநபர் ஜெயந்தி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதுகுறித்து சுப்பிரமணி காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.