கோவிலில் நகை திருட்டு


கோவிலில் நகை திருட்டு
x

ராஜபாளையம் அருகே கோவிலில் நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே கோவிலூர் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் சிலைகளில் 3 கிராம் தாலி செயின் அணிவித்து கோவில் பூசாரி பூஜை செய்து உள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலிச்செயினை காணவில்லை. இதுகுறித்து கோவிலூர் ஊர் நாட்டாமை பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story