சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போனது.
சேலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரை சந்தை பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 33). இவருடைய தந்தை கோவிந்தராஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சம்பவத்தன்று அவர் பையில் அரை பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் வைத்திருந்தார். ஆனால் அந்த பை திருட்டு போனது. இதுகுறித்து நித்யா ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நித்யாவிடம் பெண் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்து நகை, பணம் இருந்த அவருடைய பையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story