அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு


அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

நெல்லையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை-பணம் திருட்டு போனது

திருநெல்வேலி

நெல்லை சீனிவாசநகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் ராம் ஜவகர் (வயது 55). அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஐகிரவுண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பெருமாள்புரம் மகிழ்ச்சிநகரை சேர்ந்த ராஜ் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. ஆனால் எந்த பொருளும் திருடு போகவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story