தூத்துக்குடி அருகே நகை மோசடி:பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி அருகே நகை மோசடி தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் ோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு பெண், அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகைக்கடனுக்கு அதிக வட்டிக்கு வாங்கி தருவதாகவும், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் கொடுத்தாராம். இதனை நம்பி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் தங்கநகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 200 பவுன் வரை நகைகளை பெற்றுக் கொண்ட அந்த பெண் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகையை கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story