வாலிபரிடம் நகை பறிப்பு; 6 பேர் கைது
புளியங்குடி அருகே வாலிபரிடம் நகை, பணம் பறித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
புளியங்குடி:
வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூரியகுமார் (வயது 23), சிவா ஆனந்த் (21), கிருஷ்ணகுமார் (21) உள்ளிட்டவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வாலிபரிடம் செல்போன் செயலி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்தனர். சம்பவத்தன்று அந்த வாலிபரை புளியங்குடி அருகே நவ்வாசாலை பகுதிக்கு சூரியகுமார் உள்ளிட்டவர்கள் வரவழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த வாலிபரை தாக்கி, அவரிடம் இருந்த தங்க சங்கிலி, பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியகுமார், சிவா ஆனந்த், கிருஷ்ணகுமார் மற்றும் 3 சிறுவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story