திருநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடுபோனது
மதுரை
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் போலீஸ் சரகம் தனக்கன்குளம் ஆனந்தா நகரில் வசித்து வருபவர் வளர்மதி (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார். அதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். பின்னர் அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் வீடு திரும்பிய வளர்மதி தன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருநகர் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story