நகை பையை போலீசில் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
தர்மபுரியில் சாலையில் கிடந்த நகை பையை தன்னார்வலர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
தர்மபுரி
தர்மபுரி ரெயில்வே ஸ்டேசன் சாலையில் மணி என்பவரது டீ கடையின் அருகே ஒரு கைப்பை கிடந்தது. அந்த வழியாக சென்ற தன்னார்வலர் பரித் அந்த பையை எடுத்து டீ ஸ்டால் உரிமையாளர் மணியிடம் ஒப்படைத்தார். ஆனால் அந்த பையை யாரும் தேடி வரவில்லை. இதையடுத்து அந்த பையை திறந்து பார்த்தபோது புதியதாக 11¼ பவுன் நகைகள் இருந்துள்ளது. உடனடியாக அவர் தன்னார்வலர்கள் தமிழ்செல்வன், சசி, தமிழரசன், ஆகியோருடன் தர்மபுரி டவுன் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் நவாசிடம் நகை அடங்கிய பையை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் நேர்மையுடன் நகை பையை போலீசில் ஒப்படைத்த தன்னார்வலர்களை பாராட்டினார். இந்த நிலையில் தர்மபுரி ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்த்த தீபக் என்பவர் அந்த நகை பை தனக்கு சொந்தமானது என்றும், அந்த நகையை வாங்கியதற்கான ரசீதை காண்பித்ததாலும் போலீசார் நகை பையை உரியவரிடன் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story