ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

திருப்பதி கோவிலுக்கு சென்றனர்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் அவ்வையார் தெருவில், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் வசித்து வருபவர் பிச்சைபிள்ளை(வயது 62). இவர் மலையாளப்பட்டி உண்டு, உறைவிடப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், அருண்குமார் (32) என்ற மகனும், ஆஷா (29) என்ற மகளும் உள்ளனர். அருண்குமாரும், ஆஷாவும் திருமணத்திற்கு பின்னர் சென்னையில் தங்கள் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

கடந்த 10-ந் தேதியன்று இரவு பிச்சைபிள்ளையும், வளர்மதியும் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்தநிலையில் இவர்களது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பரமேஸ்வரனின் மனைவி சீத்தாலெட்சுமி(31) நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு பிச்சைபிள்ளை வீட்டில் இருந்து சத்தம் கேட்டதையடுத்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது பிச்சைபிள்ளையின் வீடு பூட்டி இருந்துள்ளது. இதையடுத்து சீத்தாலட்சுமி தூங்க சென்றுவிட்டார்.

நகை-பணம் திருட்டு

இதைத்தொடர்ந்து மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது பிச்சைபிள்ளை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த சீத்தாலட்சுமி, இது குறித்து பிச்சைப்பிள்ளைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை பிச்சைபிள்ளை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த தங்க நாணயம், தோடு, கைச்செயின் உள்பட 4 பவுன் நகைகள், ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி. ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை பகலில் நோட்டம் விட்ட திருட்டு கும்பல், நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து நகை, பணம், டி.வி.யை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பிச்சைபிள்ளை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story