இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது
திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை கைது செய்தனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை கைது செய்தனர்.
நகை பறிப்பு
திருமங்கலம் அருகே தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா (வயது 29). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவில் சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் தன்னுடைய பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனக்கன்குளம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருமங்கலம் குதிரைச்சாரிகுளம் நான்கு வழிச்சாலையில் வந்்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மீனா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.
வாலிபர் கைது
இந்த சம்பவம் குறித்து மீனா திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தின் பதிவு எண் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் மகன் பிரவீன்குமார் (27) என தெரிய வந்தது. அவரை கைது செய்து 3 பவுன் நகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.