ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு


ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு
x

மதுரையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு நடைபெற்றது.

மதுரை

மதுரை,

மதுரை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 64). வணிகவரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 3 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், கேமரா ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story