கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் நகை பறிப்பு


கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிறுவந்தாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் சிலர், மோட்சகுளத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 77), சிறுவந்தாடு சித்ரா (35), சின்னக்குப்பம் சுந்தரி (35), சரஸ்வதி (34) ஆகியோர் அணிந்திருந்த தலா 2 பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். 4 பேரிடம் இருந்தும் பறிபோன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story