நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இதில் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன் பெறலாம். முகாமானது முற்றிலும் இலவசமானது. இதன்மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story