சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது: முன்னாள் படை வீரர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருகிற டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 35 முதல் 55 வயது வரை உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கல்வி படிப்பை முடிப்பவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளில் 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் ஆவர். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற pnchennai@yahoo.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடையோர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.