100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் முற்றுகை


100 நாள் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jun 2023 3:09 AM IST (Updated: 28 Jun 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வேலை இல்லை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில் சுமார் 450- க்கும் மேற்பட்டோர் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலை திட்டம்) உறுதி திட்டபணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குள்ளவர்களில் அதிகம் பேர் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டபணியை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வறுமை கோட்டின் கணக்கின்படி 85 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு வேலை இல்லை என்று மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும் வறுமை கோட்டின் கணக்கின்படி நாளை(வியாழக்கிழமை) முதல் 50 பேருக்கு மட்டுமே 100 நாள் வேலை என்றும், 20 பேர் கொண்ட ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு சில நாட்கள் மட்டுமே வேலை தரப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை சூரக்குளம் ஊராட்சியில் இருந்து வாகனங்களில் 100 நாள் பணியாளர்கள் புறப்பட்டு திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு வந்தனர்

முற்றுகையால் பரபரப்பு

பின்னர் அவர்கள் தங்களுக்கு கிணறு, வயல், தோட்டம் இல்லை. சம்பளம் முறையாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்த போதிலும் அன்றாட பிழைப்புக்கு வழி இன்றி 100 நாள் வேலையை நம்பியே வாழ்கிறோம். ஆனால் ஒரு சில அலுவலர்களால் தங்களை வறுமைக் கோட்டில் இல்லை என்று கணக்கிட்டுள்ளனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முற்றுகையில் ஈடுபட்ட சூரக்குளம் கிராம மக்களிடம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் திட்டப்பணியில் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து முற்றுகையை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story