இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 96 பேருக்கு பணி உத்தரவுகள்
இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 96 பேருக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 96 பேருக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.வில்லியம் சகாயம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 696 பேர் கலந்து கொண்டனர். முகாமில் 12 நிறுவனங்களிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டு 96 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பணி உத்தரவினை வழங்கினர்.நிகழ்ச்சி முடித்து அவர்கள் வெளியே சென்றவுடன் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் சையது சுலைமான், பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர். சிவானந்தம், தயாநிதி ,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இயக்க மேலாளர் அருள்மொழி நன்றி கூறினார்./