வேலை வாய்ப்பு முகாம்
விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து விருதுநகரில் தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தின. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர். விருதுநகரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 172 ஆண்கள், 121 பெண்கள் என மொத்தம் 293 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு பணி நியமண ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். 387 பேர் பல்வேறு நிறுவனங்களின் வேலை வழங்குவதற்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், நெல்லை வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் சண்முகசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞான பிரபா, பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.