தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்


தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்
x

மாற்று கட்சியினர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்

திருநெல்வேலி

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் முன்னிலையில் நேற்று மாற்று கட்சியை சேர்ந்த மாநில தேர்தல் பிரிவு செயலாளர் நெல்லை செல்லப்பா நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார். அவருடன் மணப்படைவீடு வார்டு உறுப்பினர் அரி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் த.ம.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், தலைமை நிலைய செயலாளர் சேகர், மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் யாபேஷ் பாண்டியன், மானூர் வடக்கு ஒன்றிய தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story