மாணவர்கள் விடுதியில் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனர் ஆய்வு


மாணவர்கள் விடுதியில் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனர் ஆய்வு
x

ஏலகிரி மலையில் உள்ள மாணவர்கள் விடுதியில் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூரை அடுத்த பழத்தோட்டம் அருகில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. ஏலகிரி மலையில் இந்த ஒரே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. இங்கு ஏலகிரி மலையில் உள்ள மாணவ, மாணவியர்களும், ஜவ்வாது மலை, ஆலங்காயம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

மற்ற பகுதிகளில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு அரசு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று பழங்குடியினர் நலத்துறை மாவட்ட இணை இயக்குனர் சுரேஷ்குமார் விடுதிக்கு செனறு மாணவர்கள் தங்கும் இடம், கழிப்பிடம், குடிநீர், சமையலறைகளையும், மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் இதுவரை சமையலறையில் எரிவாயு இணைப்பு இல்லாத நிலையில் உடனடியாக இணைப்பை வழங்க உத்தரவிட்டார். மேலும் புதிதாக கட்டி உள்ள மாணவிகளின் தங்கும் விடுதியை ஆய்வு செய்த பின்னர் வரும் கல்வியாண்டில் அதனை திறந்து சேர்க்கை நடத்த அறிவுறுத்தினார்.

அப்போது மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால் மற்றும் விடுதி பாதுகாப்பாளர் ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story