கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணி


கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி, கீழ்வேளூர் ஒன்றியம், கீழையூர் ஒன்றியம் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக கீழ்வேளூரில் அமைந்துள்ள 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கீழ்வேளூர் பேரூராட்சி சந்தை தோப்பு பகுதியில் நாகை நகராட்சி, கீழ்வேளூர் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகளில் உள்ள 890 கிராமங்களில் பயன்பெறும் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க..

அப்போது அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முருகேசன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story