தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம் - தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார்


தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம் - தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் பங்கேற்றார்
x

பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக பத்திரிக்கையாளர் நல வாரியக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை, மனுக்களின் மீதான ஆய்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக பத்திரிக்கையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணியில் இருக்கும் போது இயற்கை எய்திய பத்திரிக்கையாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண் நிதியில் இருந்து அமைச்சர் சாமிநாதன் நிதி வழங்கினார்.


Next Story