எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக ஜே.பி.நட்டா கூறினார் - எல்.முருகன் விளக்கம்


எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக ஜே.பி.நட்டா கூறினார் - எல்.முருகன் விளக்கம்
x
தினத்தந்தி 24 Sep 2022 5:55 AM GMT (Updated: 2022-09-24T13:20:45+05:30)

;அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்.என கூறினார்.

திருச்சி,

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்ததாக பேசியது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது ;

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்று தான் ஜெ.பி நட்டா கூறினார்;அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்.என கூறினார்.


Next Story