ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தொிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் கொண்டப்பன்நாயக்கன் பட்டியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கள்ளக்குறிச்சி ஜே.எஸ்.குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற ஶ்ரீரிஷாஹனா, சுதீப், லோகு, லோகித் ஆகியோர் முதல் இடத்தையும், நித்திஷ், அர்வின்ஜெயரீஸ், கேசவ், சனா, லோகித், மிருதுளா, மோனிஷ் ஜஸ்வின் ஆகியோர் 2-ம் இடத்தையும், மிதுன் மித்ரன், முகமத் ஆசிம், அஸ்வின், கமிலோ பாரதி, சனா, மோகித், நிஷாந்த், லோகு, ஜியா, சன்விகா, தரனேஷ், சஷாந்த் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனி செந்தில்குமார், முதல்வர் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பாபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story