ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி ஆய்வு
அருப்புக்கோட்டை, சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை, சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அந்தந்த வழக்குகளின் விசாரணை குறித்தும் நீதிபதி கேட்டறிந்தார். மேலும் நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதிபதி கஜாரா, விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேம்நாத்குமார், அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலை நிலா, குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் ரத்தினரெங்கசாமி, மூத்த வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் உடனிருந்தனர்.
சாத்தூர்
அதேபோல சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் நீதிமன்ற கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இந்த நிகழ்வின் போது மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அனுராதா, மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் ஆகியோர் உடனிருந்தனர். சாத்தூர் நீதிமன்றத்திற்கு வந்த நீதிபதிகளை சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர் மற்றும் நீதித்துறை நீதிபதி ராஜபிரபு ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சாத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். ஆய்வின்போது சாத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் முனீஸ்வரன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் முனிஸ்வரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.