மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ஜூலை 8-ந் தேதி கடைசி நாள்

மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர  மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்   ஜூலை 8-ந் தேதி கடைசி நாள்
x

மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ஜூலை 8-ந் தேதி கடைசி நாள்

நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மோகனூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 2022-20–23-ம் கல்வி ஆண்டுக்கான முழு நேர டிப்ளமோ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. இந்த கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லூரியில் முழு நேர டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு ஆண்டுக்கான கட்டணம் ரூ.2,282 ஆகும்.

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி 2-ம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு கல்லூரியில் செயல்பட்டு வரும் சேவை மையம் மூலமாக தற்போது இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது.

விண்ணப்பத்திற்கான அரசு கட்டணம் 150 ரூபாய் ஆகும். இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை. எனவே தகுதி உள்ள மாணவர்கள் வருகிற 8-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story