பள்ளி மாணவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் சிறுவர்கள்


பள்ளி மாணவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் சிறுவர்கள்
x

பள்ளி மாணவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் சிறுவர்கள்

திருப்பூர்

திருப்பூர்

பள்ளி மாணவர்களை மிரட்டி பணம் பறிக்கும்சிறுவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் அருகே உள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சிலர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்றபோது சிறுவர்கள் அவரை வழிமறித்து பணத்தை பிடுங்கி உள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவர் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் நேற்று மாலை பள்ளியின் ஆசிரியர் அந்தப் பகுதிக்கு சென்று சிறுவர்களிடம் கேட்டபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு சிறுவர் மட்டும் சிக்கினான். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வடக்கு போலீசார் அங்கு சென்று அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றதும் ஆசிரியர், அப்பகுதிக்கு சென்று சிறுவர்களிடம் தட்டிக் கேட்க சென்றபோது சிறுவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியரை கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

நடவடிக்கை

இரவு நேரங்களில் பள்ளிக்குள் புகுந்து கழிப்பிடத்திற்குள் கஞ்சா புகைப்பது போன்ற சம்பவங்களில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இதனை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.


Next Story