அண்ணா அறிவியல் கோளரங்கில் மேகமூட்டத்தால் வியாழன், வெள்ளி கோள் தெரியவில்லை
அண்ணா அறிவியல் கோளரங்கில் மேகமூட்டத்தால் வியாழன், வெள்ளி கோள் தெரியவில்லை
திருச்சி
திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை வியாழன், வெள்ளி, கோள்களையும் அதன் துணை கோள்களையும் தொலை நோக்கி மூலம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் தலைமை தாங்கினார். முதுநிலை அறிவியல் உதவியாளர் ஜெயபால் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.. இதனை பார்க்க பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் வந்தனர். தொலை நோக்கி மூலம் பார்க்கும் போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கோள்களையும், நட்சத்திரங்களையும் காணமுடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story