சணல்பை தயாரிப்பு பயிற்சி முகாம்


சணல்பை தயாரிப்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதக்கோட்டவிளையில் சணல்பை தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில சமூகநலம் மற்றும் சுற்றுச்சூழல் கரிசனத்துறை சார்பில் கிராமப்புற பெண்களுக்கான சணல் பைகள் தயாரிப்பு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்துக்குட்பட்ட வேதக்கோட்டைவிளையில் நடைபெற்ற இந்த முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு நான்கு வகையான சணல் பைகள் தயாரிப்பதற்கான பயிற்சி பெற்றனர். பயிற்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றிதழ்கள், பழகும்பொருட்கள் வழங்கப்பட்டது. திருமண்டலத்தின் சமூகநலத்துறை இயக்குநர் ஜெபக்குமார் ஜாலி, சுற்றுச்சூழல் கரிசனத்துறை இயக்குநர் ஜான்சாமுவேல், கோல்டா சாமுவேல், ஜெபிதா ஜாலி, பயிற்சியாளர்கள் ஏர்னஸ்ட், வள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story