இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 6 மாதம் சிறை
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருமண ஆசைவார்த்தை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள துப்பாக்குடி, சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35).இவர் கடந்த 2007-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண், அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இசக்கி வழக்குபதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி அவர் மீது நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ1 லட்சம் அபராதம்
வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி மற்றும் ஏட்டு செல்வி ஆகியோர் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.