விளாத்திகுளம் அருகே கபடி போட்டி
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே பனையூர் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காமராஜர் தொண்டர் படை சார்பில், மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அமெச்சூர் கபடி கழக விதிமுறைகள் பின்பற்றி நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் பனையூரை சேர்ந்த பெருமாள் நினைவு கபடிக்குழு அணியும், குளத்தூரை சேர்ந்த ஜாலி பிரண்ட்ஸ் கபடி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குளத்தூர் அணியை வீழ்த்தி பனையூர் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பையும், பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story