நாலுமாவடியில் கபடி போட்டி பரிசளிப்பு விழா
நாலுமாவடியில் கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
தென்திருப்பேரை:
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும் தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகமும் இணைந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண், பெண்களுக்கான கலந்து மாநில அளவிலான கபடி போட்டியை நடத்தின. கடந்த 15-ந்தேதி இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபகர் மோகன் சி.லாசரஸ் முன்னிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டி நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள் அணியில் நாலுமாவடி ஜே.ஆர்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல்பரிசை தட்டிச் சென்றது. பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. அணி முதல் பரிசை தட்டி சென்றது.
பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மோகன் சி.லாரசரஸ் முன்னிலையில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பரிசுத் தொகையையும், ரெடிமர்ஸ் சுழற்கோப்பையையும் வழங்கினார். விழாவில் காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமை ஆசிரியர் திருநீலகண்டன், பள்ளி தலைவர் அழகேசன், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், ராஜநாராயணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் பொது மேலாளர் செல்வகுமார், அமைச்சூர் கபடி கழக வீரர் மனத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் ஆகியோர் செய்திருந்தனர்