மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்குகடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல்
மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள கே.சிதம்பராபுரத்தில் வசித்து வருபவர் விவசாயி கிருஷ்ணசாமிநாயக்கர். இவரது மனைவி இந்திரா. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இந்திரா உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story