காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி


காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைெபறுவது வழக்கம். அப்போது மாயூரநாதர், ஐயாறப்பர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டு கடைமுக தீர்த்தவாரி நேற்று நடந்தது. மாயூரநாதர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த கோவிலில் இருந்து சாமி புறப்பாடு நடைபெறவில்லை.

அஸ்திரதேவருக்கு அபிஷேகம்

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.தொடர்ந்து வடக்கு கரையிலும், தென்கரையிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

பக்தர்கள் புனித நீராடினர்

இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரியையொட்டி காவிரியின் இரு கரைகளிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன.விழாவில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story