கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்


கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:30 AM IST (Updated: 1 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா, கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

திருவிழாவில் நேற்று கைலாசநாதர்-சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் மாலையில் நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடனும் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story