கலைஞர் நூற்றாண்டு விழா: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாட முடிவு


கலைஞர் நூற்றாண்டு விழா: நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாட முடிவு
x
தினத்தந்தி 22 March 2023 7:07 AM GMT (Updated: 22 March 2023 9:09 AM GMT)

வரும் ஜூன் 3ம் தேதி முதல் ஓராண்டிற்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது

கலைஞர் நூற்றாண்டு விழாவை மக்கள் விழாவாக நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், வரும் ஜூன் 3 முதல் அடுத்த ஜூன் வரை ஓராண்டு கொண்டாட, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-

தலைவர் கருணாநிதிக்கு வரும் ஜுன் 3-ம் தேதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கைத் திட்டங்கள் இன்று இந்தியாவையே ஈர்த்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கழகமும், கழக ஆட்சியும் ஒரே நேரத்தில் பேரும் புகழும் அடைந்திருக்கும் இந்த ஆண்டில் நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருவது மிகமிகப் பொருத்தமானது. இது கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு ஆகும்.

தலைவர் கருணாநிதி, அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்த நம் கழகத்தை மேலும் வலிமைபடுத்த, ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற மாபெரும் முன்னெடுப்பு கழக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தில், புதிதாக மேலும் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பெருமுயற்சியை ஏப்ரல் 3-ம் தேதியன்று தொடங்கி, ஜூன் 3,2023 தலைவர் கருணாநிதி நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது.


Next Story