கழுகுமலை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சுகள்


கழுகுமலை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சுகள்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 7:08 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் நோயாளிகளுக்கு நர்சுகள் சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அரசு ஆஸ்பத்திரியில் 6 டாக்டர் பணியிடங்களுக்கு ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரும் விடுமுறையில் சென்றதால் நர்சுகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

டாக்டர்கள் இடமாற்றம்

கழுகுமலை மேம்படுத்ப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழுகுமலை மற்றும் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தினமும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்த நிலையில், வெளிப்புற நோயாளிகள் அமரும் அறை மற்றும் படுக்கை வசதி என விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சித்த மருத்துவ பிரிவு உள்பட தினமும் 6 மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். இரவு டாக்டரும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இங்கு பணியாற்றிய டாக்டர்கள் வேறு ஊர்களுக்கு பணியிட மாற்றம் பெற்று சென்ற நிலையில், கயத்தாறு பகுதியிலிருந்து டாக்டர்கள் தற்காலிகமாக அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

சிகிச்சை அளிக்கும் நர்சுகள்

இதனால் இங்கு நர்சுகள் மட்டுமே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் போன்றவற்றுக்கு டாக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு மாத்திரை, மருந்துகளை நர்சுகள் கொடுத்து வருகின்றனர். மற்ற நோயாளிகளை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனால் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இப்பகுதி நோயாளிகள் கோவில்பட்டி போன்ற நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த அவலநிலையை கண்டித்தும், போதிய டாக்டர்களை நியமிக்க கோரியும் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய டாக்டர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

கோரிக்கை

இதுகுறித்து விவசாயி போஸ் கூறுகையில், கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பல மாதங்களாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இப்பகுதியில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இங்கு தான் சிகிச்சை கொடுக்க வேண்டும். ஆனால், டாக்டர்கள் இல்லாததால் ேகாவில்பட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சுகாதார நிலையத்துக்கு போதிய டாக்டர்களையும், இரவு பணிக்கு ஒரு நிரந்தர டாக்டரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


Next Story