கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சீத்தாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர் ரத்தினக்குமார் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து பிளஸ்-2 முடித்த மாணவ மாணவிகளுக்கு அடுத்து என்ன படிக்கலாம்?, எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்? எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம்? போன்ற வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியை மல்லிகா, பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் முத்துலட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story