காளியம்மன் கோவில் திருவிழா
வேடசந்தூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே உள்ள அரியப்பித்தன்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கரகம் அலங்கரித்து வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அக்னி சட்டி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் பக்தர் ஒருவர் கருப்பணசாமி வேடமிட்டு பெரிய வெள்ளை குதிரையில் அமர்ந்து வீடு, வீடாக சென்று காணிக்கையை நேர்த்திக்கடனாக வசூல் செய்து கோவில் உண்டியலில் செலுத்தி வழிபட்டார். இந்த காட்சியை திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story