கொட்டாம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா


கொட்டாம்பட்டியில்  காளியம்மன் கோவில் திருவிழா
x

கொட்டாம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டியில் உள்ள வடக்குபுற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாைவயொட்டி முதல் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டுதல் நிகழ்ச்சி ஆண்டுேதாறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் வழக்கம்போல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி 8 நாட்கள் காப்பு கட்டிய பக்தர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு நேற்று காலையில் கிராம தெய்வமான பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்துதல், சிலாக்குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று சிவக்களம், சின்னகொட்டாம்பட்டி, சந்தைபேட்டை, மந்தைதிடல் வழியாக சென்ற கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விழாவையொட்டி 4 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story