காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா


தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம்


கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பங்குனி திருவிழா

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதை அடுத்து காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

தீ மிதித்தனர்

இதில் விரதமிருந்து காப்புகட்டிக்கொண்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர். மேலும் சில பக்தர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீக்குண்டத்தில் இறங்கியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story