கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 116 மாணவிகளுக்கு பார்வை குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கல்வி உதவி திட்ட மேலாளர் பழனியாப்பிள்ளை கலந்து கொண்டு 116 மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஜெனிபர் ராகுல், பள்ளி தலைமை ஆசிரியை கீதா, உதவி தலைமை ஆசிரியை கற்பகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story