கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. பேட்டி


கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தை  வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்  மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என்று மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. கூறினார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை உறுதிமொழி தலைவரும், காட்டூயிர் வாரிய குழு உறுப்பினருமான தா.உதயசூரியன் 3-வது முறையாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 'தினத்தந்தி' நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவின் ஆலோசனைப்படி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க.வை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் ஏற்கனவே தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்து, அதை அப்படியே தக்க வைத்துக்கொள்வோம்.

வளர்ச்சி பாதைக்கு...

மேலும் மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் ஆதரவோடு கட்சியை வழிநடத்துவேன். அதேபோல் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம், ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பல திட்டங்களை செயல்படுத்தி சங்கராபுரம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன். குறிப்பாக கல்வராயன்மலை வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story