கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு - சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம்


கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு - சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம்
x

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு ஐகோர்டில் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் மாணவின் மரண வழக்கு விசாணை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாகவும், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி தரப்பில் அளித்த பதிலை தொடர்ந்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story