கல்மந்தை காலனி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


கல்மந்தை காலனி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x

கல்மந்தை காலனி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்மந்தை ஊர் பொதுமக்கள் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கல்மந்தை காலனி கிளை செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் திருச்சி மாநகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலனியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்க வேண்டும். வீடுகளை இழந்து 5 ஆண்டு காலத்திற்கு மேல் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் 118 ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தகவல் அறிந்த கிழக்கு தாசில்தார், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிழக்கு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.


Next Story