கல்மர பூங்கா-அமோனைட்ஸ் மையத்தை வெளிநாட்டு மருத்துவ மாணவிகள் பார்வையிட்டனர்


கல்மர பூங்கா-அமோனைட்ஸ் மையத்தை வெளிநாட்டு மருத்துவ மாணவிகள் பார்வையிட்டனர்
x

கல்மர பூங்கா-அமோனைட்ஸ் மையத்தை வெளிநாட்டு மருத்துவ மாணவிகள் பார்வையிட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே செஞ்சேரியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன ஆசிரமத்துடன் இணைந்த பள்ளிக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லியா, எமிலி, நவோமி, முரியல், அலிசியா, கெயல் ஆகிய 6 மருத்துவ மாணவிகள் சேவையாற்ற வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் நேற்று அந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூரில் உள்ள கல்மர பூங்காவையும், பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அமோனைட்ஸ் மையத்தையும் பார்வையிட்டனர். அவர்கள் கல்மர படிமத்தையும், அமோனைட்ஸ் மையத்தில் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான தலைக்காலி எனப்படும் அமோனைட்ஸ் படிமத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் அவர்கள் அதன் முன்பு நின்று கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அமோனைட்ஸ் மையத்தை கலெக்டருடன் இணைந்து பார்வையிட்டனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவிகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story