கழுகு மலைமுத்து மாரியம்மன்கோவில் கொடைவிழா தொடக்கம்


கழுகு மலைமுத்து மாரியம்மன்கோவில் கொடைவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகு மலை முத்து மாரியம்மன்கோவில் கொடைவிழா வெள்ளிக்கிழமை கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன், சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், சப்பாணி மாடசாமி, கருப்பசாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மாலை 6 மணியளவில் பெண்கள் பங்கேற்கும் 501 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜையும் நடைபெறும். 29-ந்தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது


Next Story