கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா


கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில்   புரட்டாசி பெருந்திருவிழா
x

தமிழகத்தின் தென் திருப்பதியான தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரூர்

புரட்டாசி பெருந்திருவிழா

தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான நந்தகுமார் உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து வருகிற 30-ந் தேதி வெள்ளி கருட சேவை நடைபெறுகிறது.

திருத்தேர் வடம்பிடித்தல்

வருகிற அக்டோபர் மாதம் 3-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4-ந் தேதி குதிரை வாகனமும், 5-ந் தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்வும் நடைபெற உள்ளது. பின்னர் 9-ந் தேதி வெள்ளி கருட வாகனமும், 11-ந் தேதி வெள்ளி கருட வாகனமும், 13-ந் தேதி வெள்ளி அனுமந்த வாகனமும், 14-ந் தேதி வெள்ளி கருட வாகனமும், 16-ந் தேதி முத்து பல்லக்கு நிகழ்வும், 17-ந் தேதி ஆளும் பல்லக்கு நிகழ்வும், 18-ந் தேதி புஷ்ப யாகமும் நடைபெறுகிறது.

மேலும் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி (2-வது சனிக்கிழமையும்), 8-ந் தேதி (3-வது சனிக்கிழமையும்), 15-ந் தேதி (4-வது சனிக்கிழமையும்) சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பட்டாச்சாரியார்கள், உபயதாரர்கள், பக்தர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.


Next Story