12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!!


12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!!
x

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. நாளை ( திங்கள் கிழமை) தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "அரசுப் பொதுத்தேர்வுகள் உங்கள் அறிவையும் திறனையும் சோதிப்பவை அல்ல; அடுத்தகட்ட நகர்வுக்கான வழித்துணைதான். அச்சம் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்.தேவையற்ற அழுத்தம் தர வேண்டாம் என்பது பெற்றோருக்கு என் வேண்டுகோள்" என்று அதில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.


Next Story