நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி நிறைவு விழா


நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி நிறைவு விழா
x

நெமிலி பாலா பீடத்தில் கந்த சஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் கடந்த 24-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. இந்த விழா நிறைவு பெற்றது. விழாவில் ஸ்ரீபாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி எழுதி, பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்தை எல்லாம் அந்த கந்தன் வசம் நெஞ்சம் சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் என்ற இசை குறுந்தகட்டின் மறு வெளியீட்டு விழாவும், வாரியார் முகவுரை எழுதிய அன்னை பாலா அற்புதங்கள் என்னும் நூலின் மறு வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஸ்ரீபாலா பீட நிர்வாகி மோகன்ஜி அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை தினமலர் இயக்குனர் டாக்டர் ராமசுப்பு கலந்து கொண்டார். நெமிலி பாபாஜி தலைமையில் திருமுருக பாராயணம் நடைபெற்றது. நிறைவாக பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ பாலா ஆன்மீக குடும்பங்கள் மற்றும் நெமிலி இறை பணி மன்ற அங்கத்தினர் செய்தனர்.


Next Story